34 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
நச்சி எழுதல் நமதுகடன் என்றுணர்ந்து காக்க முனைந்தெழுக! காவா தொழிவீரேல் போக்க முடியாத புல்லடிமை நேரும் எழுத்தை இழக்க இசைவீரேல் உங்கள் கழுத்தைக் கொடுத்துக் கலங்கும் நிலைபெறுவீர்! ஆண்டாண்டு காலம் அழியாத் தமிழ்மொழிக்கு வேண்டாதார் இந்த வினையெல்லாம் செய்கின்றார்; வீரத் தமிழினத்தின் வேரறுக்க மாற்றலர்தாம் ஈரத் துணியிட்டு நும்கழுத்தை ஈர்கின்றார்; காட்டிக் கொடுக்கும் கயமைக் குணமிங்கு நீட்டித் தலைகாட்டி நேய மொழியுரைக்கும்' வீழ்ந்து சிதையாதீர்! வீணாகிப் போகாதீர்! தாழ்ந்து பணியாதீர்! தன்மானங் கொண்டெழுவீர்! எவ்வழியால் உட்புகுவோம் என்றே இருக்கின்றார் செவ்வியர்போல் பேசுகின்றார் செந்தமிழீர் நீரயர்ந்தால் அன்றே நுழைவர்; அயரேல்! தமிழ்வாழ ஒன்றே நினைப்பீர் உளத்து. |