42 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
17. விடை கொடு தாயே விடைகொடு விடைகொடு தாயே - சமரில் வென்றிடுந் திறமருள் வாயே உடைமைகள் உயிருடல் நீயே - எங்கள் உணர்வினில் உறுந்தமிழ்த் தாயே. படையுடன் இவண்வரும் இந்தி- பல பாடை கொணர்ந்திடும் இந்தி தடையுடன் புகவரும் இந்தி - பெருந் தடிபல கொணர்ந்திடும் இந்தி படைவரும் தடைவரும் அறிவோம் - அது பாதியில் உடைபடும் தெரிவோம் கொடுமைகள் கண்டுளந் திரியோம் - எமைக் கொன்றிடி னுஞ்சமர் புரிவோம். அடிபட அடிபட எழுவோம் - எங்கள் ஆவி பிரிந்திடின் விழுவோம் சுடுபடக் கொள்கையில் நழுவோம்- நெஞ்சில் துணிவொடு தமிழ்மொழி தொழுவோம். |