பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்47

நாளைக்கு நின்னினம் போற்றுமோ? -சிறு
கோழைக்குங் கீழெனத் தூற்றுமே?
காளைக்குச் சோற்றினில் ஏக்கமோ?- மொழி
வாழையைக் காப்பதில் தூக்கமோ?

தோளுக்குள் ளே உரம் ஏற்றுவாய் - மனச்
சூளைக்குள் ளேஎரி மூட்டுவாய்
வாளுக்குள் ளேசுடர் ஏற்றுவாய்-ஒரு
நாளைக்குள் ளேபகை ஓட்டுவாய்

9.3.1987