பக்கம் எண் :

78கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

40. பட்டஞ் சூட்டுக!

பல்கலைக் கழகம் பயிற்றிடும் மொழிகளுள்
தொல்தமிழ் ஒன்று; தூய்தமிழ் விழைந்தோர்
ஈரிரண் டாண்டுகள் இலக்கண இலக்கியப்
போரினுள் மூழ்கித் தேறினர் வென்றனர்;
வென்றவர் தம்மை வித்துவான் என்றனர்;
அன்றது சிறப்பென அயர்ந்தனர் நம்மவர்;
உரிமையின் பின்னர் அரியணை ஏறிய
பெரியவர் துணையால் பெயர்பிறி தாயது;
சொற்றமிழ் பயின்றோர் சூடிய பிறமொழிப்
பட்டயம் போயது பைந்தமிழ் ஆயது;
புலவர் எனும்பெயர் பூத்தது மலர்ந்தது
குலவிய மகிழ்வால்கூறினம் நன்றி;
பெயராற் புதுமை பெற்றதே ஆயினும்
உயர்வால் மதிப்பால் ஒன்றும் பயனிலை;
பட்டயம் எனவே பகர்ந்தனர் அதனைப்
பட்டம் எனச்சொலப் பதைத்தனர் தமிழர்;
ஆங்கிலம் பயின்றவர்க் கடிமைப் புத்தி
நீங்கிய பாடிலை நெடுநாட் பிணியது;
கழகம் அரியணை கண்ட பின்னரும்
இழிநிலை தமிழுக் கிருத்தலும் முறையோ?
தமிழால் வென்றது தமிழால் உயர்ந்தது
தமிழை வளர்ப்பது தமிழை மதிப்பது
கழகம் என்றெலாம் கழறுவர் அதனால்