மானமெனும் ஓருணர்ச்சி இருந்தி ருப்பின் மதிகெட்டுத் தமிழ்மொழியைத் தமிழர் நாட்டில் ஈனமுற எதிர்ப்போமா? நமக்கு முன்னே எதிர்ப்பிருக்க விடுவோமா? இசைய ரங்கில் வானமுதத் தமிழிருக்க அதைவி டுத்து வந்தமொழிப் பாடல்களைப் பாடு வோமா? ஏனுயர்வு தமிழ்க்கில்லை தமிழர் நாட்டில்? இனியேனும் மானத்தைக் காப்போம் வாரீர். பாவேந்தர் விழா, உலகத் தமிழ்க் கழகம், பெங்களூர். 25.8.1979 |