பக்கம் எண் :

128கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

யாராண்டால் நமக்கென்ன என்றி ருந்த
       எமக்கெல்லாம் உணர்வூட்டி அறிவும் ஊட்டிப்
‘பாராண்ட தமிழினமே விழித்து நோக்கு!
       பகுத்தறிவால் ஆய்ந்துணர்வாய்!’ என்ற தந்தை
நூறாண்டுப் பணிவியந்து விழாவெ டுத்தோம்
       நோக்கி எதிர் வீட்டிலுள ஒருவன் நம்மை
‘யாராரோ போட்டிவிழாh எடுத்தா’ ரென்றே
       ஏளனங்கள் செய்கின்றான்; பேதை மாந்தன்!

வெம்மைமிகும் பாலையைப்போல் தலைவ ருண்டு
       விளைவறியா நெய்தலைப்போல் தலைவ ருண்டு
செம்மறிமேய் முல்லையைப்போல் தலைவ ருண்டு
       சேர்விலங்கு குறிஞ்சியைப்போல் தலைவ ருண்டு
*கொம்மையுறும் உழுபடையால் பிளந்த போதும்
       கொடுமைகண்டு கலங்காமல் பயனே நல்கும்
நன்மருத நிலம்போல உணர்வு தந்து
       நமைஎல்லாம் காக்கின்ற தலைவர் ஐயா.

நாதியற்றுக் கிடந்துழன்ற தமிழினத்தை
       நானிலத்தில் தலைநிமிரச் செய்த கோவே!
தீதகற்றும் சொன்மலர்கள் தேர்ந்தெ டுத்துச்
       செந்தமிழிற் பாமாலை தொடுத்து வந்து
காதலுற்று நின்னடிக்குச் சூட்டு கின்றோம்
       கைதொழுது வாழ்த்துகின்றோம் எமது நெஞ்சில்
கோதகற்றும் பகுத்தறிவை இன்னும் ஏற்று!
       கொடுமைகளை எதிர்க்கின்ற துணிவும் ஊட்டு.

நீதந்த பகுத்தறிவுச் சுடரை ஏந்தி
       நிமிர்ந்திங்கு நிற்கின்றோம் வீரம் தாங்கிப்
பாதந்த தமிழ்மொழிக்குத் தீங்கு வந்தால்
       பாய்ந்தெழுந்து சேர்ந்தெதிர்ப்போம் மானங் காப்போம்;


* கொம்மை - திரட்சி