பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்129

யாதெந்தத் துயர்தரினும் அச்சங் கொள்ளோம்;
       யாம்எமது திருநாட்டின் உரிமை காப்போம்;
பூதந்த தேனுண்ட வண்டே போலப்
       புத்துலகப் பாடல்களே பாடி நிற்போம்.

வெண்தாடி வேந்தர் வாழ்க
       விறல்மிகு பெரியார் வாழ்க
கண்மூடி வழக்கம் நீங்கிக்
       கதிரவன் ஒளியே வாழ்க
தண்ணாரும் தமிழும் நாடும்
       தழைத்தினி தென்றும் வாழ்க
பண்பாரும் கழகம் வாழ்க
       பகுத்துணர் அறிவே வாழ்க

பெரியார் நூற்றாண்டு விழா,
பெரியார் திடல்,
சென்னை.
16-9-1978