பக்கம் எண் :

130கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

5
இயற்கைப் பெரியார்

டித்தளத்தில் சிந்தனைகள் கனிவ ளம்போல்
       அடர்ந்தடர்ந்து படர்ந்திருக்கும்; தோண்டத்தோண்ட
வெடித்தெழும்பும் அறிவெனும்நீர்; அறியா மாந்தர்
       விளைக்கின்ற தீமைகளைத் தாங்கிக் கொள்ளும்;
பிடித்துழுது பிளப்பதுபோல் துயர்தந் தாலும்
       பெரும்பயனே நல்குமிவை; நிலத்தின் பாங்கு;
படித்தறியா அடிமைகளாய்க் கிடந்தார் உய்யப்
       பாடுபட்ட பெரியாரும் நிலமே போல்வார்.

ஆரியமாம் பாறையெலாம் சிதறி வீழ
       ஆர்ப்பரித்துப் பாய்கின்ற அருவி நீராம்;
பாரிலுளார் தாகத்தைத் தீர்த்து வைக்கும்
       பகுத்தறிவு சுரந்துவரும் ஊற்றின் நீராம்;
சோறுதர வளப்படுத்த ஊர்கள் தோறும்
       சுற்றிவரும் வற்றாத ஆற்றின் நீராம்;
பேரறிவுச் சிந்தனையின் ஆழங் காணாப்
       பெருங்கடலின் நீரெனவும் பெரியார் ஆனார்

வேண்டாத குப்பைகளை அழிப்ப தற்கு
       வேண்டுவதும் நெருப்பேயாம்; இருட்டைப் போக்கத்
தூண்டுவதும் நெருப்பேயாம்; அரிசி தன்னைச்
       சோறாக்க உதவுவதும் நெருப்பே யாகும்;