132 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
திருத்தலங்கள் திருக்கோவில் வேண்டா என்று தெரிவித்தார் நம்பெரியார்; அவர்தம் பேச்சை மறுத்துரைக்க இயலவில்லை; என்றா லும்நான் மறுக்கின்றேன்; தன்மான இயக்கத் தார்க்குத் திருத்தலங்கள் மூன்றுண்டு; நம்மை உய்யச் செய்கின்ற வழிகாட்டும் தலங் ளாகும்; பொறுத்திருந்தால் என்மொழிக்குப் பொருள்வி ளங்கும் புனிதமிகு தலங்களென ஏற்றுக் கொள்வீர். பாரோடு நம்நாடு சமமாய் நிற்கப் பகுத்தறிவுக் கொள்கைஒளி பரவி நிற்கப் பேரோடு புகழோடு தமிழி னத்தார் பிறரோடு தலைநிமிர்ந்து வாழ்ந்து காட்டப் பேரேடு பெற்றிலங்கும் தமிழ்மொ ழிக்குப் பேரிடர்கள் வாராமல் தடுத்துக் காக்க ஈரோடு காஞ்சிபுரம் ஆரூர் என்னும் இம்மூன்றும் நம்மவர்க்குத் தலங்கள் அன்றோ? |