140 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
பகலிலும் இரவிலும் பயணம் செய்வார் பனிமழை பாரார் பசியெனச் சோரார் இகலது சாய இழிவுகள் மாய எதிர்ப்பார் அறப்போர் தொடுப்பார் அந்த - வெண்தாடி ஆதர வின்றி அண்டிய பிள்ளை அத்தனைப் பேருக்கும் அவர்தாம் தந்தை ஓதிய கொள்கை மோதுதல் அன்றி ஒருதனி மனிதரைப் பகைத்ததும் இல்லை - வெண்தாடி தண்டின் துணையால் தளர்நடை நடந்தும் தரைதனில் நடந்திட இயலா திருந்தும் தொண்டின் பணியில் துவளா திருந்தார் தொழுவோம் அவர்பணி தொடர்வோம் எங்கள் - வெண்தாடி 21.6.1979 |