பக்கம் எண் :

142கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

கற்பனைக் கோட்டைக்குள் சாமி - பொய்கள்
கட்டிக் கதைக்கப் படித்தஆ சாமி
விற்பனைப் பாட்டுக்குள் பூமி-கெட்டு
வீழாமற் காத்தவர் ஈ.வே.ரா.சாமி

- போராட்டக்

வேத புராணங்கள் கோடி - மக்கள்
வீரத்தை மானத்தை மூடினர் பாடி
யாதென்று காரணம் நாடி - வீரம்
யாவையும் மீட்டவர் வெண்ணிறத் தாடி

- போராட்டக்

ஏடாண்ட பொய்யைப் படித்து-வாழ்வில்
ஏமாளி யாகினர் நாட்டைக்கொ டுத்து
பீடாண்டு வந்தவழி மாந்தர்- பாழும்
பேதைத் தனத்தைப் பிடித்துத் தடுக்கப்

- போராட்டக்

நாடாண்டு வந்ததமிழ் மகனே - நீயோ
நாணிக் குளித்துடலம் கூனிக்கிடந்தாய்
கூடாண்டு வந்தபுலி மறவா- முரசம்
கொட்டடா கொட்டடா என்றுகளங் கண்டார்

- போராட்டக்

21.6.1979