144 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
15 தொண்டுக்கிலக்ணங்கண்டவர் தொண்டுக் கிலக்கணங் கண்டவர் பெரியார் தொடர்ந்ததன் இலக்கியம் ஆகவும் உரியார் - தொண்டு கண்டதை ஏசியும் கல்லினை வீசியும் கண்டவர் தாக்கினும் கொண்டது பேசித் - தொண்டு குளித்திடப் பன்னீர் கொடுத்திடும் செழிப்பால் கோமான் அவரென யாவரும் அழைப்பர் குளித்திட எனினோ முகம்மிகச் சுழிப்பார் குளிக்குமந் நேரமும் பணியிடைக் கழிப்பார் - தொண்டு புகழ்ந்திடும் தோழர் போற்றின ராயினும் பொருளென அவற்றை மதித்துளம் மயங்கார் இகழ்ந்திடும் மாந்தர் தூற்றின ராயினும் இருசெவி வழங்கார் எள்முனை கலங்கார் - தொண்டு மலர்பல தூவிய பஞ்சணை மேவிய மதிதவழ் மாளிகைத் துயில்வளம் படைத்தார் அலைந்திடும் ஆண்டிகள் போலதை விடுத்தே அல்லும் பகலும் அயரா துழைத்தார் - தொண்டு |