146 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
16 இன்றைய நாடு அயில்வேலும் உடைவாளும் உண்டான நாடு - இன்று அயலார்கள் அரசாளச் சரிபோடும் நாடு - அயில் வயல்யாவும் கயல்பாயும் புனல்சூழும் நாடு வயிறார உணவார இயலாத நாடு மயிலாடும் குயில்பாடும் வளமான நாடு மனம்நோகத் தெருவோரம் குடிவாழும் நாடு - அயில் தலையான நெறிகண்டு புகழோடு நின்றோர் தன்மானங் கெடும்போதும் உணராத நாடு தலைநாளில் மொழிமூன்று வகையாகி நின்றும் தமிழாலே இசைபாடத் தெரியாத நாடு - அயில் கதையாகக் கனவாக எதையேனும் சொல்வார் காணாத உலகாள வழியோதிச் செல்வார் பொதுவாகும் பொருள்யாவும் எனுமாறு நாடிப் புதுவாழ்வு நனவாக முயலாத நாடு - அயில் அரங்கேறும் மொழியாளர் பொழிவார்கள் சொல்லை ஆனாலும் அவர்வாழ்வில் தொடர்பேதும் இல்லை நிறமாறும் பச்சோந்தி மரபாளர் சொல்லில் நினைகின்ற பயனேதும் விளைவாவ தில்லை - அயில் |