பக்கம் எண் :

148கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

17
ஒன்றா இரண்டா?

ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல - ஐயா
உழைத்தவை யாவையும் தொடுத்துச் சொல்ல - செய்கை

- ஒன்றா

வெயிலா மழையா நடந்து செல்வார் - நாம்
விழித்திடத்தமிழினம் பிழைத்திடச் செய்த - தொண்டு

- ஒன்றா

சென்றால் இருந்தால் நம் நினைவு - கண்
சிறிதே அயர்ந்தால் நம் கனவு - கனவு

- ஒன்றா

நினைவும் கனவும் எவர்க்காக - போர்
நெஞ்சினில் பொங்குதல் நமக்காகப் - போர்

- ஒன்றா

நின்குலம் தழைத்திடத் தமிழ்கமகனே - நீ
நிலைத்திடத் துடித்தெழு! நின்கடனே

உயிரும் உடலும் நிலைத்தவையோ? - என்றும்
உழைப்பாய் நின்னினம் உயர்ந்திடவே
உயர்ந்திடவே உயர்ந்திடவே

25.6.79