பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்149

18
எப்படிப் பெரியார் வாழ்வார்?

பெரியார் எப்படி வாழ்வார் -நம்
பேச்சும் செயலும் பிளவுபட் டிருந்தால்

- பெரியார்

சரியா தவறா சடங்குகள் என்றே
அறியா திருந்தால் அறிவையும் மறந்தால்

- பெரியார்

சாதியும் மதமும் சரிப்பட வில்லை
சமுதா யந்தான் உருப்பட வில்லை
மோதிய பகையோ சாய்ந்திட வில்லை
மூடமும் இங்கே மாய்ந்திட வில்லை

- பெரியார்

சிந்தனை செய்கெனச் செப்பினர் அன்றோ?
சிறிதும் நும்செவி புகுந்ததும் உண்டோ?
மந்தைகள் போலினும் வாழ்வது நன்றோ?
மாந்தர்கள் எனநீர் மாறுவ தென்றோ?

- பெரியார்

6.12.1982