பக்கம் எண் :

154கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

21
தமிழ் காத்த தலைவர்

செப்பும் மொழிபதி னெட்டுடையாள் என்றாலும்
ஒப்புமனச் சிந்தனை ஒன்றுடையாள் பாரதத்தாய்
என்றுரைத்தான் என்பாட்டன்; ஏற்புடைய அக்கருத்தை
ஒன்றுபடும் ஆற்றை உணரா வடபுலத்தார்
செப்புமொழி ஒன்றென்றார் சிந்தனைகள் நூறாகத்
தப்புவழி மேற்கொண்டார்; தக்கார் பலர்கூடிச்
‘செந்தமிழ்க்குத் தீங்கு சிறிது வரஒவ்வோம்
இந்திக்குத் தென்னாட்டில் என்றும் இடமில்லை;
ஒற்றுமைக்குத் தீமை எருவாக்க எண்ணாதீர்
பற்றுமக்குத் தாய்மொழியில் பாரித் திருப்பதுபோல்
எங்களுக்கும் தாய்மொழியில் ஈடில்லாப் பற்றுண்டு
பொங்கும் மொழியுணர்வைப் புல்லென் றிகழாதீர்’
என்றெல்லாம் கூறி இடித்துரைத்தும் கேளாராய்த்
தென்றல் உலவுந் திருநாட்டில் இந்தியினை
வன்பில் திணித்தார் வடபுலத்து வாழ்மாந்தர்;
அன்போ டுரைத்தும் அவர்செவியில் ஏறவில்லை
நம்மை அடிமையென நாடாள்வோர் எண்ணியதால்
வெம்மை வழியை விழைந்து திணித்தார்கள்;
‘பாரில் குடியரசுப் பண்பை எடுத்தெடுத்துக்
கூறிப் பயனில்லை; கூடார் எனமாறிக்
கொண்டதே கொள்கையெனக் கொட்டம் அடிக்கின்றார்
கண்டும் பொறுத்திருந்தால் காலம் நமைப் பழிக்கும்