158 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
23 தமிழ்நாட்டுப் பேரரண் அறிவுடைய மாந்தரெலாம் அறிஞர் ஆகார் அளப்பிலநூல் பயின்றவரும் அறிஞர் ஆகார்; நெறியொழுகி, அருள்சுரந்து, மக்கட் பண்பு நிறைந்திருந்து, பிறர்துயரம் துடைத்து, நல்ல குறியுடைய வாழ்வுநெறி மலரத் தம்மைக் கொடுப்பவரே அறிஞராவர்; அனைத்துங் கூடி அறிஞரெனும் சொல்லுக்கே உரிய ரானார் அண்ணாஎன் றழைப்பதற்கும் உரிய ரானார். குறளுக்கும் மூன்றெழுத்தே அண்ணா என்னும் குளிர்மொழிக்கும் மூன்றெழுத்தே; உலகம் போற்றும் குறள்வகுக்கும் பால்மூன்றே அண்ணா சொன்ன கோட்பாடும் ஒருமுன்றே; நுவலும் பாட்டின் உருவுக்கும் பேர்குறளே அண்ணா கொண்ட உருவமதும் குறளேயாம்; அதனால் அண்ணா குறளுக்கு நிகராவார்; மேலும் வாழ்வு கூறுகிற குறளுக்குப் பொருளும் ஆவார். பாவேந்தன் பாடடுக்கோர் அரணாய் நின்றார் பைந்தமிழிப்பண் பாட்டுக்கும் அரணாய் நின்றார் நாவேந்தர் கோவேந்தர் கூடிக் காத்த நாட்டுக்கும் அரணானார் நமது நெஞ்சப் |