16 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
அப்பெருமை தேர்ந்துணர அவ்வழியிற் சென்றொழுக எப்பொழுதுஞ் சிந்திக்க இங்கே திறனில்லை; என்று நினைந்திரங்கி ஏங்கிக் கவலையினால் ஒன்றும் புரியாமல் உள்ளந் துவண்டிருந்தேன்; ஆங்கே எனதருகில் ஆணழகன் ஓர்மகன்தான் தீங்கே தெரியாத தெய்வத் திருமகன்போல் வந்து கருணையுடன் வாலறிவன் நின்றருளைச் சிந்தும் விழியாற் சிறிதென்னை நோக்கியிதழ்ப் புன்னகை செய்தான்; புலவனவன் புன்சிரிப்பில் என்ன பொருளென் றுணர இயலவில்லை! ஏளனமா? அன்றி இரக்கத்தின் காரணமா? தாளமென உள்ளந் தவிதவித்தேன்; அம்மகனை நோக்க நிமிர்ந்தேன் நுழைபுலத்தான் அவ்விடத்தை நீக்கி மறைந்தான் நினைந்து. |