24 எழுத்தும் பேச்சும் முழுத்தாளில் எதைஎதையோ எழுதி விட்டு முற்போக்கு மறுமலர்ச்சி என்று சொல்லி எழுத்தாளர் உலகத்தில் சிலபேர் கூடி ஏடெல்லாம் குப்பையென மாற்றி விட்டார் குழுத்தோற்று நாணும்வணம் எழுதிக் காட்டிக் கூரறிவுச் சுடர்வேல்போல் எழுத்தை மாற்றி எழுத்தாளர் உலகத்தை வென்று நின்றான் இவன்நடையை எழுத்தாளர் தொடர லானார். பரலோகக் கதைகளையே படைத்துக் காட்டிப் பாடலொடு நடிக்கின்ற திரைப் படங்கள் உரமேறிப் பரவிவரும் அந்த நாளில் ஒரிரவு நம்அண்ணன் விழித்தி ருந்தான் தரமான திரைப்படங்கள் உலவக் கண்டோம் தன்மான வுணர்ச்சிமிக வளரக் கண்டோம் அறிவாளன் கலையுலகம் புகுந்தான் அங்கும் அவன்வெற்றித் திலகந்தான் பெற்றுக் கொண்டான். பொருள்பெறவும் புகழ்பெறவும் நடிக்க வில்லை புகைப்படங்கள் எடுப்பதற்கும் நடிக்க வில்லை இருள்செறியும் தமிழகத்தைத் தமிழி னத்தை எழுச்சிபெறச் செய்வதற்கே நடித்து வந்தான் |