164 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
வாகை சூடி வளர்ந்தது கழகம்; அரியென முழங்கி எரியெனச் சொற்போர் புரியும் வீரன் போரினில் தீரன் உரியநம் தம்பி உழைப்பால் உயர்ந்தோன் கருணா நிதியவன் காத்தனன் மானம்; *கறங்கெனச் சுழலும் கழகத் தோழர் பறந்துபறந் தாற்றிடும் அயராப் பணியினர் துட்ட விலங்குகள் உட்புக விடாது வட்டந் தோறும் வட்டமிட் டுலவினர்; போர்க்களம் புகுந்தனர் புரிந்தனர் அறப்போர்; சேர்த்தனர் வெற்றி ஆர்த்தனர் வீரர்; சென்னை மாந்தரை முன்னணி வீரரைச் சென்னி தாழ்த்தி வாழ்த்துவென் யானே; அண்ணா அண்ணா வாழ்த்துக அண்ணா ‘நண்ணார் நமக்கிலை நாடுநம் குறிக்கோள் மாநகர் நலம்பெற மாநக ராட்சியை ஏந்துக கழகம்’ என்றுநும் நாவால் வாழ்த்துக அண்ணா வாழ்த்துக பெரிதே. மாநகராட்சித் தேர்தலில் கழகம் வென்ற போது பாடியது
* கறங்கு - காற்றாடி |