26 அரசு நாட்டினான் அரசு நாட்டினான் - சிறையில் அண்ணன் நாட்டினான் விரைவில் நாட்டிலும் - நமது அரசு நாட்டுவான் முரசம் ஆர்த்தது - வெற்றி முரசம் ஆர்த்தது பரவி வாழ்த்துவோம் - அண்ணன் படையை வாழ்த்துவோம் பகைகள் நீங்கவே - நல்ல பான்மை ஓங்கவே குகையின் வேங்கைகாள் - ஒன்று கூடு வீர்களே பகைகள் மிஞ்சுமோ - நமது படைகள் கொஞ்சமோ! புகையும் நெஞ்சிலே - கனல் பொங்கி விஞ்சுமே உடலும் ஒன்றுதான் - பெற்ற உயிரும் ஒன்றுதான் அடிமை போகவே - போரில் அவற்றை ஈகுவோம் |