166 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
கடமை ஆற்றுவோம் - நாடு காவல் போற்றுவோம் உடைமை திராவிடம் - என்றே உலகில் சாற்றுவோம் வாழ்க தாயகம் - என்றும் வாழ்க திராவிடம் வாழ்க வாழ்கவே - அண்ணன் வாழ்க வாழ்கவே 1962 சூலை 19-இல் அக விலை உயர்வை எதிர்த்து மறியல் செய்தமைக்காகச் சிறைப்படுத்தப்பட்ட அறிஞர் அண்ணா. வேலூர்ச் சிறைச்சாலையில் தமது பிறந்த நாளையொட்டி, அரசங்கன்று நாட்டினார். அதன் நினைவாகப் பாடப்பட்டது இப்பாட்டு |