பக்கம் எண் :

168கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

28
காக்குங் கைகள்

சங்கத்தால் தமிழ்வளர்த்த மதுரை மூதூர்த்
       தண்பதியில் பெரும்புலவர் கூடி நின்ற
சங்கத்தில் ஒருதலைவர் எழுந்து நின்று,
       தகுதியிலா இழிமொழிகள் கூறி, நெஞ்சம்
பொங்கத்தான் பழித்துரைத்தார்; அதனைக் கேட்டும்
       பொறுமைக்குப் புகலிடமாய் விளங்கும் அண்ணன்
தங்கத்தின் பெருங்குணத்தான் சினக்க வில்லை
       தமிழ்நெஞ்சிற் பண்பொன்றே விளங்கக் கண்டேன்.

பழித்துரைத்த தலைவருளம் நோகும் வண்ணம்
       பதிலுரைக்க விரும்பவிலை; ஒருசொல் லேனும்
இழித்துரைக்க எடுத்தெழுத முயல வில்லை;
       எவரிடத்துங் காணாத உயர்ந்த வுள்ளம்
பழுத்திருப்போன், அத்தலைவர் நாட்டுக் காகப்
       பாடுபட்ட வீரத்தைத் தியாகப் போக்கை
எழுத்தினிக்க எழுதியதற் பண்பைக் காக்க
       எழுந்தஎழிற் கையெங்கள் அண்ணா கையே.

தென்னவர்தம் நெஞ்சமெலாம் சோலை யாக்கித்
       தித்திக்குங் குரலெழுப்பிக் குயிலாய்ப் பாடி
மன்னரெனக் கவியுலகில் விளங்கி வந்த
       மாகவிஞர் ஏறனையார் கவிதைக் கையால்
கன்னல்நிகர் மொழியானை அண்ணன் தன்னைக்
       கடுமொழிகள் சிறுமொழிகள் வரைந்தா ரேனும்