பக்கம் எண் :

170கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

ஈரமிலா நெஞ்சத்தார் இட்ட தீயால்
       ஏங்குகிற எளியவரைக் காக்குங் கைகள்
நேரமெலாம் தந்நலமே பேணிக் காத்த
       நெறியாளர் ஆட்சியிலே காணா நன்மை
சேரவொரு நெறிமுறையைச் செய்து நாடு
       செழுமையுறப் படியளந்து காக்குங் கைகள்
வீரமெலாம் ஒருவிரலில் காட்டும் அண்ணா
       விழிப்போடு செங்கோன்மை காக்குங் கைகள்.

29
தாய்மொழிக் காவலர்

நற்றலைவர் ஓரமைச்சர் யானோ இந்த
       நாடறிந்த முடியரசன்; அமைச்சர் முன்னே
உற்றரசன் பாடுவது புதுமை யன்றோ?
       உண்மையினில் குடியாட்சி மதிக்கும் பண்பு
பெற்றமையால் இப்புதுமை காணு கின்றோம்;
       பெருமைமிகு *தி.மு.க. தலைமை ஏற்க
மற்றதொரு பேரரசு வணங்கி நிற்க
       மாறிவரும் காலத்தைப் படைத்து விட்டோம்.

தமிழ்மொழியின் தவமகனை, நாடு காக்கும்
       தலைமகனைத் தனிமகனைக் காஞ்சி தந்த
அமிழ்தனைய பெருமகனைப் புகழ்ந்து பாட
       அறியாத நாவென்ன நாவே! கண்ணின்
இமையமைனயான் மெய்ப்புகழைக் கேட்டு வக்க
       இயலாத செவியென்ன செவியே! அன்பால்
தமையனெனும் அவன்வந்து பிறந்த ஞான்றே
       தமிழ்சிறந்து தனிப்பெருமை கொள்ளக் கண்டோம்.

கற்கண்டோ சர்க்கரையோ கரும்பின் பாகோ
       கனிபிழிந்து வடித்தெடுத்த இனிய சாறோ
சொற்கொண்டல் பொழிமழையோ கவிஞன் தந்த
       சுவைமிக்க அணிமிக்க கவிதை தானோ


* தி.மு.க. - திருவாரூர் மு. கருணாநிதி