178 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
நன்றெண்ணிச் செய்தான் நயவஞ்சப் போக்கெல்லாம் சென்றொழியச் செய்தான் சிறுமைப் பகையனைத்தும் வென்றுமலர் வாகை விறல்மாலை சூடிநின்றான்; ஆண்டுபல வாக அரசிருக்கை வீற்றிருந்தே ஆண்டிருந்தோர் தம்மை அசைப்பதற்கு யாருமிலர் என்ற செருக்காலே எக்காள மிட்டவர்கள் நின்றுதடு மாறி நெடுமூச்சு வாங்கவைத்தான்; நாகம் படர்ந்திருக்கும் நச்சுப் பெருமரத்தை வேகப் புயலாகிவேரோடு சாய்த்து விட்டான்; சாடும் புயலாகிச் சங்காரம் செய்த பினர்ப் பாடுமிளந் தென்றலெனப் பாராண்டு நிற்கின்றான்; மக்கள் நலங்காத்து மாநிலத்தார் நெஞ்சமெலாம் புக்கிருந்து வாழ்ந்து பொலியும் உயிராகி, மாந்தர் உயிரானால் மன்னுயி;ர்கள் அத்தனையும் ஏந்தும் உடலாக ஈடின்றி ஆள்கின்றான்; காக்குந் தொழில்வல்லான் காட்டும் நெறிநடத்தல் யார்க்கும் நலமென்பேன் யான். 29.9.1968 |