‘நம்மிற் பெரியவர்தாம் நம்மைப் பழித்துரைத்தார் விம்மாதீர் மன்னிப்போம் விட்டு மறந்திருப்போம்’ என்று மொழிந்த இனிய குணத்தானை நின்று வணங்கி நெடுங்காலம் வாழ்த்திடுவேன்; நம்மிடையே வாழ்ந்து நலம்பெற்று வாழ்வுயர்ந்து தம்பி நிலைமாறித் தாவிவிட்ட ஓர்நடிகர் எங்கிருந் தாலுமவர் வாழ்க எனவாழ்த்திப் பொங்கி மொழிந்தஒரு பொன்மொழியை வாழ்த்துகினறேன்; அன்புளத்தின் ஆழம் எவரும் அறியாத தென்புலத்தான் வாழ்க சிறந்து. 29.9.1968 |