புல்லிய கொடுநோய் போக்கிய வல்லவர் மில்லர் எனும்பெயர் மேவிய நல்லவர் அமெரிக்க ராயினும் ஆருயிர் காத்தலால் தமரெமக் காயினர் தமராம் அவரைப் பொங்கும் உளத்தாற் போற்றுதும் யாமே; எங்கள் தோழரென் றேத்துதும் யாமே குடர்ப்புண் தீர்த்தனர் குலவிடும் எங்கள் இடர்ப்புண் தீர்த்தனர் இனியராம் எமக்கே; நலமுற வந்துள நல்லோய் வணக்கம் இளகிய மனமும் இனியநன் மொழியும் குலவிய தலைவா கூர்மதி யுடையோய் வாழிய நெடிதே வாழிய இனிதே. அமெரிக்க நாடு சென்று நலம் பெற்றுத் திரும்பிய அண்ணாவுக்கு எழுதிய வரவுரை. 6.11.1968 |