கொடியஒரு பாவியவன் யாழ்ப றித்தான் குமுறியழ முகாரிப்பண் பாடு கின்றான். தமிழ்வானில் வட்டமிட்டுச் சுற்றிச் சுற்றித் தனக்குநிகர் இல்லைஎனப் பாடிப் பாடி அமிழ்தனைய இசைபரப்பி நம்மை எல்லாம் அகமகிழச் செய்ததொரு வானம் பாடி; இமிழ்கடலுக் கப்பாலும் பறந்து சென்றே இனியதமிழ் பாடிவரக் கண்டு வந்தோம்; உமிழ்சினத்துக் காலனெனும் வேடன் கண்டான்; ஒருசிறிதும் இரக்கமிலான் வீழ்த்தி விட்டான். வித்தாகி முளையாகிக் கழனி யெங்கும் விளைகின்ற பயிராகிச் செழித்து நல்ல கொத்தாகிப் பயனாகிக் கூடுங் காலை கொள்பயனைச் சிதைத்தானோர் கொடிய பாவி; பித்தாகித் திரிகின்றோம் துன்ப மென்னும் பேராழி மூழ்குகின்றோம்; தமிழர் வாழ்வின் சொத்தாகி வந்தானை அண்ணா என்னும் சொல்லுக்கே உரியானைப் பறித்தான் அம்மா! அறப்போர்கள் பலமுடித்தான் ஆட்சி பெற்றான் அன்பொன்றே மனத்தமைத்தான்; அந்த ஆட்சிச் சிறப்பாலே முதலமைச்சன் ஆனான் அண்ணன்; செந்தமிழர் நற்றவமென் றிருந்தோம்; ஆனால் இறப்பாலும் முதலமைச்சன் ஆனான் அம்மா! இத்துயரை எவரிடம்சென் றாற்றிக் கொள்வோம்? மறப்பெனும் மருந்தாலும் மாறா தந்தோ! மனமென்னும் ஒன்றனைநாம் பெற்ற தாலே. செந்தமிழ்க்கும் புலவர்க்கும் விடிவு காலம் சிறந்ததொரு பொற்காலம் மீண்டும் இங்கு |