வேக்காடு சாதிக்கு வைக்கும் நாளே வியனுலகப் புகழ்நமக்குக் கிட்டும் நாளாம்; நோக்காடு கொண்டொழுகுஞ் சமுதா யத்தில் நூறுவகைச் சாதிகளாற் பயனே இல்லை. பார்ப்பானைச் சுடுகின்ற காடும் உண்டு பறையனுக்குச் சுடுகாடு தனியே உண்டு ஆர்ப்பரிக்குஞ் சமயங்கள் பலவுண் டென்றால் அத்தனைக்கும் தனித்தனியே சுடுகா டுண்டு மேற்போன கடவுளர்க்குஞ் சாதி யுண்டு மேதினியைச் சீர்குலைக்கும் பிற்போக் காளர் ஏற்பாடு தொலையும்வரை வள்ளு வற்கே எடுக்கின்ற திருநாளாற் பயனே யில்லை முற்போக்குப் பெருவெள்ளம் திரண்டு ருண்டு முழுமூச்சில் எதிர்த்தோடிப் பெருகும் நாளில் பிற்போக்குக் கும்பலெலாம் ஒன்று கூடிப் பிழையான செயல்செய்ய நினைந்து பேசிக் கற்பாறை யிட்டதனைத் தடுக்கக் கண்டோம்; கற்களெல்லாம் சிதறுண்டு போயிற் றன்றே; பிற்பாடும் மடமுடையார் தடுத்தால் அந்தப் பெருவெள்ளம் தடைபட்டு நின்றா போகும்? பாரதியென் றுரைக்குமொரு பருவமேகம் பாரதிக்குத் தாசனெனும் கரிய மேகம் பாரதிர முழங்கிவரும் இளைஞர் கூட்டப் பரம்பரையாம் கோடைமுகில் அனைத்துங் கூடி ஊரதிர இடிஇடித்து மின்னல் கூட்டி ஓயாது மழைபொழிய வெள்ளம் பொங்கிச்
செவ்வி - தகுந்த சமயம், அருமை |