20 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
சீறிவரும் வேகத்தில் அந்தக் கும்பல் சிறுவர்விடு கப்பலென மூழ்கிப் போகும். உள்ளத்தை உயிர்தன்னை உயிரைத் தாங்கும் உடல்தன்னை வள்ளுவற்குப் பின்னே போக்கி வள்ளுவத்துக் கோட்பாட்டை நன்கு ணர்ந்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து நிற்போம்; வள்ளுவத்தைப் பெற்றதிரு நாட்ட கத்தே வாழ்கின்ற பேறுற்றோம்; ஆத லாலே பள்ளத்தில் வீழாமல் இன்ப வானில் பறக்கின்ற நிலைபெறுவோம் வாரீர்!வாரீர்! |