206 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
39 வெற்றி மலர் சூடுங்கள்! நம்மை வளர்த்துவிட்ட நல்லவன் தாயுளத்தை இம்மா நிலத்தே எவரிடத்துங் கண்டதில்லை; ‘பண்பட்ட தம்பியராம் பன்னூற்றின் ஆயிரவர் எண்ணிட்டுக் காட்ட இயலாரைச் சேர்த்தென்னைத் தாயொருத்தி தன்வயிறு தாங்காத காரணத்தால் போய்வயி றொவ்வொன்றும் புக்குப் பிறந்தோம்நாம்’ என்று மொழிந்தவன்றன் ஈடில்லாப் பண்புளத்தை இன்று நினைத்தாலும் என்பெல்லாம் நெக்குருகும்; நாட்டை வயமாக்கும் நாவல்லான், நற்றமிழை ஏட்டில் எழுதிமெரு கேற்றும் எழுத்தாளன், நாடும் அரசியலை நன்காய்ந்த பேரறிஞன், வாடும் எளியோர்க்கு வாழ்வு தரவந்தோன் நண்பாளன், பண்பாளன், நாடகத்துப் பேராசான், கண்போல வாய்த்தஒரு காஞ்சி புரத்தலைவன் ஒன்றாலும் நம்அண்ணன் உள்ளம் மயங்கவில்லை; மாறாட்டம் இல்லாமல் மக்கள் நலங்கருதிப் போராட்டம் நூறு புரிந்தானைத் தன்னாட்டில் ஏழை துயர்துடைக்க வெஞ்சிறைகள் ஏற்றானைக் கோழை எனப்பழித்தான் கொள்கை சிறிதுமிலான்; போராட்டம் என்றாலே போய்ப்பதுங்கும் குள்ளநரி ஈரோட்டார் தந்தஅரி யேற்றைப் பழித்ததுகாண்; அண்ணன் குடும்பத்தை அப்பிறவி ஏசிவந்த |