24 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
6 இன்பமா? துன்பமா? வள்ளுவத்து வாழ்வியலைத் தெளியக் கற்று வாழ்வாங்கு வாழ்வதுதான் வாழ்வாம் என்று தெள்ளுதமிழ்ச் சான்றோர்கள் செப்பி வைத்தார்; செப்புமொழி கற்றுணர்ந்து வாழ்ந்தோ மல்லோம் பள்ளமுறு கழிநீரின் தேக்கம் போலப் பாழாகச் செய்துவிட்டோம் பெற்ற வாழ்வை! கள்ளமுறும் பிறநெறியைச் சார்ந்து கெட்டோம்! கயமைஎலாம் நம்வாழ்வில் புகுத்தி விட்டோம்! பிறக்கின்றோம் வளர்கின்றோம் காதல் செய்வோம் பிறகுவரும் உறவுகளும் காணு கின்றோம் துறக்கமெனப் பேரின்பம் வாழ்விற் காண்போம் தொலைப்பரிய துன்பமெனச் சிலநாள் சொல்வோம் இறக்கின்றோம் இறுதியிலே இறந்த பின்னர் *எச்சமெனும் புகழொன்று நிலைத்து நிற்கச் சிறக்கின்ற வாழ்வியலைக் கற்றோ மல்லோம் சிறுவிலங்குக் கூட்டமென வாழ்ந்து விட்டோம். இவ்வுலகில் பிறக்கின்றோம், பிறந்த பின்னர் இறக்கின்றோம், இறவாமல் இருந்த தில்லை; இவ்விரண்டு செயலுக்கும் இடையில் தான்நாம் இருக்கின்றோம்; இடைவெளியில் நாமி யற்றும்
* எச்சம் - எஞ்சி நிற்பது |