26 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
இன்பத்தின் பின்பக்கம் துன்பம், அந்த இடருக்குப் பின்பக்கம் இன்பம், இந்த எண்ணத்தை முன்வைத்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கின்ற கனியாகும் அன்றோ? வாழ்வின் பின்பக்கம் ஒன்றுண்டாம் என்னும் அந்தப் பேருண்மை தனையெண்ண வேண்டும்; மற்றைப் பின்பக்கம் சாக்காடே ஆகும் என்ற பேருண்மை உணர்ந்துவிடின் அச்சம் சாகும். பிறக்குங்கால் தாலாட்டு; மண்ணில் பின்னர் இறக்குங்கால் ஒப்பாரி; இரண்டும் பாட்டு; மறக்காதீர் வாழ்க்கையொரு கவிதை யாகும்; மலர்ந்துவருங் கவிதைக்குள் திளைத்து வாழ்வீர்! வெறுக்காதீர் வாழ்க்கைதனை! சாக்கா டென்றால் வீரனுக்கோர் பூக்காடு; கோழைக் குத்தான் பொறுக்காத நோக்காடு; வாழ்க்கைப் போரில் புறங்காட்டா வீரனைப்போல் வாழ்வீர் நின்றே. |