பக்கம் எண் :

32கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

‘அறத்தைவிடச் சிறப்பளிக்கும் ஆக்கம் இல்லை
       அவ்வறத்தை மறப்பதைப்போற் கேடும் இல்லை
அறத்தாலே வருவதொன்றே இன்பம் ஆகும்
       அஃதின்றேல் புகழில்லை பொருளும் இல்லை;
அறச்செயலே செயற்பால தாத லாலே
       அச்செயலே எவ்வெவருஞ் செய்தல் வேண்டும்;
மறச்செயலைத் தவிர்த்தறமே புரியும் மாந்தர்
       மனக்கவலை அற்றவராய் வாழ்வர்’ என்றான்.

‘இன்னுங்கேள்! முகமலர்ந்தும் இனிது தேர்ந்தும்
       இளகுமனம் பொருந்திவரும் இனிய சொற்கள்
பன்னுதலே அறமாகும்; பயனால் நன்மை
       பயக்கின்ற சொற்களைத்தன் மனத்தால் ஆய்ந்து
கன்னலென இனியசொலின் தீமை தேய்ந்து
       கனிவுதரும் அறம்பெருகும்; மேலும் மாந்தன்
தன்னுளத்து மாசகற்றித் தூய்மை செய்யத்
       தலைப்படுதல் நல்லறமாம்’ என்று சொன்னான்.

‘மற்றொருவன் நல்வாழ்வைக் காணும் போது
       மனம்புழுங்கும் அழுக்காறும், ஐம்பு லன்கள்
சுற்றிவரும் வழியெல்லாம் சுழல விட்டுத்
       துய்க்குமவாக் கொள்மனமும் இவ்வி ரண்டால்
பற்றிவரும் வெகுளியுடன் இன்னாச் சொல்லும்
       பறித்தெறிந்து வாழ்வதுதான் அறமாம் என்றேன்
சொற்றவெலாம் மறந்துவிட்டுச் சுற்று கின்றாய்
       தூயநெறி காட்டிவிட்டேன் நடந்து காட்டு’

‘காட்டியஇவ் வழிதனில்நீ நடந்து சென்றால்
       கவலையிலா மனிதனென வாழ்வாய்’ என்றான்;
ஊட்டியஇவ் வறவுரைகள் நெஞ்சிற் கொண்டேன்
       ஒப்பில்லா மொழிப்புலவ! எனக்கோர் ஐயம்