பக்கம் எண் :

34கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

சிறப்பான தமிழ்மானங் காத்தல் வேண்டின்
       சிறந்ததடா இவ்வறப்போர்; செயலிற் காட்டு!

உன்னினமும் தாய்மொழியும் நாடும் வாழ
       உயிரீய வேண்டுமடா; வயிற்றுச் சோறு
தின்னுதற்கே வாழாதே! மான வாழ்வில்
       தீங்கொன்று புகுந்திடுமேல் வீரங் காட்டி
மன்னவன்போல் இந்நாட்டில் வாழ்க’ என்று
       வழியுரைத்துப் போய்விட்டான்; எனது நாட்டின்
துன்னிவரும் அறப்போர்க்கு வழியைக் காட்டித்
       துணிவளித்த வள்ளுவனை வாழ்த்து கின்றேன்.

திருக்குறட் கழகம்,
காரைக்குடி (1961)