பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்35

11
சுவையோ சுவை!

பாரைத் திருத்திப் பயன்படுத்தப் பண்படுத்தி
ஏரைப் பிடித்தோன் எழில்கொழிக்கக் கண்டிருந்தான்;
மண்ணில் தனதுழைப்பால் மாநிலத்துத் தாய்தந்த
உண்ணும் பொருளெடுத்தே ஒவ்வொன்றுந் தான்சுவைத்தான்;
கார்ப்பும் புளிப்புங் கசப்புந் துவர்ப்புடனே
யார்க்கும் பிடிக்கும் இனிப்போ டுவர்ப்பென்று
சொல்லும் அருமைச் சுவையெல்லாம் அப்பொருளில்
மல்குதலைக் கண்டவற்றை வாயாற் சுவைத்துணர்ந்தான்
நெஞ்சங் களித்தான் நினைந்து நினைந்தொருநாள்
விஞ்சுஞ் சுவையை விரித்துரைத்தான் ஆறென்று;
நாச்சுவையை ஆறாக நாட்டுக் குரைத்தவனே
பாச்சுவையுங் கண்டு பகர்ந்தான் வகைசெய்து;
வாயுணவே நோக்காக வாழ்ந்தோன் அவனல்லன்
தோயுஞ் செவியுணவுஞ் சொன்னான், அதன்மேலும்
தோற்றுசுவை எட்டென்றுஞ் சொன்னான் அவன்பெற்ற
ஆற்றலினைக் காணின் அடடாஓ! என்று
மருட்கைச் சுவைதோன்றும்; மாநிலத்தில் முன்னோர்
பெருக்கும் புகழறியப் பேரார்வந் தோன்றிவரும்;
ஓதும் இலக்கியத்தை ஓதிச் சுவையமைத்துத்
தீதின்றிச் செந்தமிழைக் காத்த திறத்தினையும்
அத்தமிழை ஓம்பும் அரும்புலவர் வாழ்ந்ததையும்