எங்கள்திரு நாட்டின் எதிர்காலம் என்னாமோ? வெந்தே உரிமை விழலாகிப் போய்விடுமோ? அந்தோ! எனமயங்க அச்சச் சுவைதோன்றும்; புக்க இருளைப் புறங்காணக் கீழ்வானில் செக்கச் சிவந்துவரும் செங்கதிரைக் காணுவதால் உள்ளங் களித்தே உவகைச் சுவைதோன்றும் வெள்ளமென இன்பம் விளைந்து பெருக்கெடுக்கும்; பாட்டுச் சுவையறிந்த பாரோரே நாம்வாழும் நாட்டுச் சுவையறிவீர் நன்கு. வள்ளுவர் பேரவை, சிவகங்கை 29.4.1962 |