பக்கம் எண் :

38கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

12
குறள் மனிதன் குறிக்கோள்

பெருவழியிற் செல்வோர்கள் வழியின் நாப்பண்
       பிரிந்துசெலும் பலவழிகள் கிளைத்தல் கண்டு
மறுகியுளம் திகைத்தவராய் நிற்றல் போல
       மாந்தரெலாம் பலநெறிகள் வாழ்வில் வந்து
பெருகுதலால் செல்வழியைத் *தேறா ராகிப்
       பேதுறுங்கால் நன்னெறியைக் காட்டு தற்கு
வருமொருவன் வகுத்துரைத்த குறிக்கோள் யாவும்
       வையமெலாம் உய்யஒரு வழியே செய்யும்

அருளென்னும் பெருவேந்தன் ஆட்சி செய்யும்
       அறிவுலகைப் பொதுமைநலம் பூத்து நின்று
பரவுகின்ற புத்துலகைக் காண எண்ணிப்
       பரிவுடனே விரைந்துசெலும் நம்முன் இங்கே
இருவழிகள் கிளைவழிகள் பிரிதல் கண்டோம்;
       இரண்டிலொன்று மனுவழியாய்; மற்றும் ஒன்று
பெருமைமிகு தமிழ்வழியாய்த் தோன்றுங் காலை
       பேராசான் நல்வழியிற் செலுத்து கின்றான்

சாதியினால் சமயத்தாற் பிளவு பட்டுத்
       தடுமாறித் தாழ்வுற்று மக்கள் தம்முள்
மோதுண்டு போகாமல் தடுத்துக் காத்தான்
       முன்பில்லாத் தீப்பழக்கம் வேண்டா என்றான்;


*தேறார் - தெளியாதவர்