படுகுழியில் தள்ளிடலாம், எவர்தஞ் சொத்தைப் பறித்திடலாம் சுருட்டிடலாம் எனநி னைத்தே அடுகழுகுப் பார்வையினைச் செலுத்து கின்றோம் ஆறறிவுப் போக்கினையே கொளுத்து கின்றோம். எல்லாமே தனக்குரிமை என்று நாளும் ஏப்பமிடுந் தனியுடைமை யுலக மொன்றாம்; இல்லாமை யில்லாமற் செய்து காக்க எல்லார்க்கும் பொதுவாகும் உடைமை என்று மல்லாடும் பொதுவுடைமை உலகம் ஒன்றாம்; மாநிலமே இவ்விருவே றுலக மாகிப் பொல்லாத விளைவுகளால் மோதி நிற்கப் போராடும் ஒருவழியிற் புகுந்து விட்டோம். தென்னகத்தே தோன்றியநல் லுரிமை தன்னால் தீந்தமிழ்க்குத் தனியுடைமை யாகி நின்று மன்னுயிர்க்கே பொதுமையறம் உரைப்ப தாலிம் மாந்தர்குலப் பொதுவுடைமை யாகி விட்ட தன்னிகர்த்த திருக்குறள்நூல் வகுத்த மைத்துத் தருகின்ற உடைமையெலாம் மறந்து விட்டோம்; பொன்னினைத்தே மண்ணினைத்தே மயங்கி நின்று போராடித் திரிகின்றோம் பகைமை கொண்டோம். அன்பெனுமோ ருடைமைதனை அகத்திற் கொள்ளும் அவனேயிங் குயிர்வாழ்வான் என்னத் தக்கான் என்புடைய வெற்றுடம்பே அன்பில் லானேல் எனமொழியு மினியகுறள் கற்றி ருந்தும் வன்புடைய மனத்தேமாய் ஈர மற்று வாழ்கின்றோம் நடைப்பிணமாய் அந்தோ அந்தோ! என்புகன்று திருத்துவது? குறளின் மேலா இனியொருநூல் யாண்டிருந்து கண்டெ டுப்போம்? மனமென்னுங் குரங்கடக்கி, வரம்பு மீறும் வாயடக்கி, நினைந்தவெலாஞ் செய்து காட்டும் |