அளப்பரிய செல்வங்க ளுடைய ரேனும் அறிவென்னும் ஒருசெல்வம் இல்லா ராயின் வளப்பமது காணாத வறிய ராவர்; வளரறிவு பெற்றவரே எல்லாம் பெற்றார்; உளத்திலுறு குறைநீங்க மெய்ம்மை காண உதவிவரும் அவ்வறிவுச் செல்வந் தேடி விளக்கமுற நினைந்ததுண்டா? நன்றில் உய்க்க விழைந்ததுண்டா? தீதுக்கே செலுத்து கின்றோம். அசைவில்லா மனவூக்க முடையான் றன்பால் ஆக்கமெலாம் வழிவினவிச் சென்று சேரும்; திசையெல்லா மவன்புகழே பரவி நிற்கும்; தீதுறுங்கால் மனமுடைந்தாற் பயனே யில்லை; வசையில்லா மனவெழுச்சி கொண்டு ழைத்தால் வாழ்விலுயர் நிலைகாண்பர்; ஆனால் நாமோ இசைவில்லா ஒருதுயரங் காண நேரின் இடிந்துமன முடைந்தயர்ந்து சோர்ந்து நிற்போம். தெய்வத்தாற் பயன்குன்றி நின்ற தேனும் தேகத்தா லுழைப்போர்க்குப் பயனுண் டென்றே உய்யத்தான் வழியுரைக்குங் குறளைக் கண்டோம்; ஓதுகின்றோம் ஆனாலும் முயன்று நின்று செய்யத்தான் மனமுண்டா? சோம்பல் கொண்டு செயலின்றி விதியென்று பழியைப் போட்டுப் பொய்யைத்தான் மொழிகின்றோம் கடமை செய்யோம் புழுவினுக்கு மெதிர்நில்லாச் சிறுமை கொண்டோம். உரந்தோயு முடலழகன் கண்கா லாய உறுப்பழகன் ஆயினுநற் பண்பில் லானேல் அரம்போலுங் கூரறிவிற் பெரிய னேனும் அவன்மாந்தன் எனவுரையா துலகம்; நல்ல மரம்போலுந் தோற்றத்த னெனப்ப ழிக்கும்; மனிதரென அறிவுடையோர் நமைம திக்கத் |