56 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
இனியநல் நெறியதாம் எளியநல் முறையதாம் இனிஅது செய்வேன் எனநான் முயன்றேன் அன்றே என்மன மாசுகள் அகன்றன நன்றே மொழிந்த நாவலன் வாழிய! இன்னுஞ் சிலமொழி இசைத்தனன் என்பால்; ‘ஏதிலார் குற்றம் எடுத்தெடுத் தியம்பித் தீதுகள் சேர்க்கத் தெரிந்தனை நின்பாற் சேர்ந்துள குற்றம் தேர்ந்துணர் பெற்றிமை பெற்றா யல்லை, பெற்றனை யாயின் உற்றொரு தீதும் உனைவருத் தாதே’ என்றவன் உரைமொழி ஏற்றது முதலா ஒன்றிய குற்றம் ஒன்றா தொழித்தேன்; உள்ளத் தூய்மையும் உயர்பெருந் தெளிவும் தெள்ளத் தெளியத் தெரித்தனன் அதனால் அவனே தலைவன் அவற்குநான் அடிமை; தவமே செய்தேன் தலைவனைப் பெற்றேன்; கற்கும் பருவங் கடந்தேன் கட்டெழில் நிற்கும் பருவம் நெருங்கிய தென்னை; மங்கை ஒருத்தி மாலை சூட்டிடப் பொங்கும் இன்பப் புத்துல கதனில் உறவைப் பெருக்கும் ஒருநெறி புகுந்து நிலவுப் பயன்கொள நினைந்ததென் மனனே; மங்கையர் இன்பம் மாபெருந் துன்பம் எங்கும் இடர்தரும் இருளுல கதுவாம் துறவைப் பெருக்கித் துயரின் நீங்கி இறவாப் பெருநெறி எய்துக’ என்றொரு குரலுங் கேட்டது குழம்பிய தென்மனம்; உரவோன் மனமுவந் துலகுக் குணர்த்தும் |