பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்59

18
வள்ளுவர் இன்று வந்தால்...?

நெல்வேலிச் சீமைபெறும் நீள்புகழைச் சொல்வதெனில்
சொல்வேலிக் குள்ளடங்காத் தொன்மைச் சிறப்பாகும்;
சங்கத் தமிழ்சொல்லும் தண்பொருநை பாய்வதனால்
பொங்கும் வளத்துடன்சேர் பூமி யிதுவாகும்;
செந்தமிழைத் தென்றலுடன் சேர்த்து மகிழ்ந்தளிக்கும்
சந்தனங்கள் சூழ்பொதியச் சாரல் திருநாடாம்;
செப்புபுகழ் இப்பதியில், சேர்த்த திரவியமாம்
ஒப்பில் தனந்தந்து கல்விப்பா லூட்டுதலால்
நற்றாயும் ஆனவர்பேர் நாட்டிவருங் கல்லூரி
பெற்ற பெருமைகளைப் பேசி மகிழ்கின்றேன்;
அன்றிங்கு வெள்ளையரின் ஆட்சிதனை ஓட்டுதற்கு-
ஒன்றிவரு காதலினால் நின்றுகலம் ஓட்டியவர்
மிக்குவரும் நாட்டன்பு மேவியதால் வன்சிறையில்
செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் கற்றஇடம்,
பாட்டை தெரியாமல் பாடுகின்ற போதுபுதுப்
பாட்டை நமக்களித்த பாவலராய்க் காவலராய்ப்
பாட்டுத் திறத்தாலே பாருலகைக் காத்தெனக்குப்
பாட்டனென வந்தவராம் பாரதியுங் கற்றஇடம்
ஆதலினால் இந்த அரங்கேறிப் பாடுதற்குக்
காதல் மிகவுடையேன் கைகூப்பி வணங்குகின்றேன்;
வள்ளுவனென் றெல்லாரும் வாய்மணக்கச் சொல்கின்ற