பக்கம் எண் :

66கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

நாடெல்லாம் மெச்சவரும் நற்கலைஞன்; எந்நாளும்
வீடெல்லாம் போற்றி வியக்கவரும் நாவலனாம்;
பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்துக்
காட்டுந் திறலுடைய கட்டழகுப் பாவேந்தன்;
செய்கவெனச் சொல்லி விதித்தான் சிலவற்றைச்
செய்யற்க என்றுசில செப்பி விலக்கிவிட்டான்;
பாவல்லான் செய்யப் பணித்தவற்றை நாம்விலக்கிப்
பூவெல்லாம் வைத்துப் புகழ்பாடிப் போற்றுகின்றோம்,
மேலோன் வகுத்துரைத்த வேதப் பொருளுணர
நூலோன் நமக்களித்தான் நுண்மாண் நுழைபுலத்தை;
பெற்ற புலத்தால் பெரியோன் குறளையினிக்
கற்றுக் கசடறுத்துக் கற்றவற்றை நெஞ்சிருத்திப்
பாட்டைத் தெளிந்துணர்ந்து பாட்டை விலகாமல்
நாட்டில் நடைபயில்வோம் நாம்.

1.3.1970