1 முப்பால் அமுது மூவாப் புகழ் கொண்ட முப்பாற் சிறப்பை ஒரு நாவால் தொகுத்துரைக்க நாம்முனைதல் - மேல்வானைக் கையால் முழம்போட்டுக் காட்ட நினைப்பதுவாம் ஐயா அளந்துரைப்பார் ஆர்? நல்ல அறமிருக்கும் நாடும் பொருளிருக்கும் சொல்லரிய இன்பச் சுவையிருக்கும் - வெல்லரிய முப்பால் அமுதருந்தி மொய்ம்புபெற வாரீரோ எப்பாலுஞ் செல்லேல் இனி. 31.5.1969 |