பக்கம் எண் :

72கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

21
தில்லியில் வள்ளுவர்

அலுவலுக்குப் புகலிடத்தைத் தேடித் தேடி
       அங்கங்கே குடிபுகுந்த தமிழ மாந்தர்
தொலைவிடத்துப் புகுந்தாலும் தமது நாட்டைத்
       தூயதமிழ்ப் பண்பாட்டை மறவா ராகி
நிலைபெறுத்தும் இயல்புடையார் எனவு ணர்ந்து
       நெடும்புகழ்சேர் தில்லியிலும் வள்ளு வத்தின்
நிலையுணர்த்த ஒருமன்றம் நிறுவி வைத்த
       நெஞ்சத்தைச் செந்தமிழால் வாழ்த்து கின்றேன்.

வகுத்தமைத்த சமுதாயம் சீர ழிந்து
       வருவதுகண் டுளமுருகிச் சீர்தி ருத்தம்
புகுத்தியவர் *இராசாராம் மோகன் ராய்அப்
       புகழ்மனிதர் வடநாட்டுச் சிற்பி ஆவார்;
பகுத்தறிவுக் கொள்கையினால் சமுதா யத்தைப்
       பண்படுத்தும் இராசாராம் தெற்கு நாட்டார்;
வகுத்தவர்தாம் வள்ளுவற்குக் கண்ட மன்றம்
       வாழ்கவென வளர்கவென வாழ்த்துகின்றேன்.

உலகத்துப் பாவலரைத், தமிழ கத்தின்
       ஒப்பரிய நாவலரை, உலக வாழ்க்கைக்
கலைவகுத்த புலமைமிகும் கலைஞர் கோவைக்,
       கற்றுணர்ந்த அறிஞர்கள் அறிஞர் தம்மைச்,


*இராசாராம் - முன்னாள் அமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர்.