74 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
22 வள்ளுவர் வழி கார்மேகம் நெடுவானில் சூழும் போது கானமயில் தோகைவிரித் தாடல் செய்யும்; கூர்வேனிற் பருவநிலை வந்தால் எங்கும் கூவுகிற இசைக்குயில்கள் பாடல் செய்யும்; நீர்சூழும் பொழுதத்துக் குளத்தில் வாழும் நெடுங்கயல்கள் துள்ளிவிளை யாடும் ஓடும் பார்மகிழ எழிற்கலைகள் தோன்ற வேண்டின் பண்பட்ட சூழ்நிலைகள் வாய்க்க வேண்டும். ஊர்வாழச் சீர்பாடும் கவிஞன் வாழ்வில் உவகைஎனும் தண்முகில்கள் சூழ்ந்து நின்றால், *ஏர்வாழும் இளவேனிற் பருவந் தோன்றி இன்பமெனும் இளந்தென்றல் வீசிச் சென்றால் பேர்வாழும் அவன்நெஞ்சில் உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்கும்; கலையுணர்வும் ஓங்கி நிற்கும்; பார்வாழ வழிபுகல்வான்; தோகை கொண்ட பச்சைமயில் போலாவான்; குயிலும் ஆவான். மாறுபட்ட சூழ்நிலையால் சோர்வும் உற்று மதிமயங்கி மனம்கலங்கி நிற்கும் போது வீறுபெற்ற செயலாளர் என்பால் வந்து விழாவரங்கில் பாட்டரங்கத் தலைமை ஏற்கக்
*ஏர்வாழும் - அழகு பொருந்திய |