76 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
மனக்கோட்டம் தவிர்க்கஒரு நூலைத் தந்து வாழவழி சொன்ன திருவள்ளு வற்கு வனப்பூட்டும் திருக்கோட்டம் அமைத்து நெஞ்சில் வளர்ந்துவரும் நன்றியினை யுணர்த்தும் வண்ணம் மனப்பூட்டைத் திறந்தாரை வாழ்த்தும் வேளை மாகவிஞன் வள்ளுவற்குக் கோட்டம் ஏனோ? எனக்கேட்டான் ஒருபேதை; நன்றி யின்றி எதையேனும் உளறுவதே தொழிலாக் கொண்டோன். எதையேனும் எழுதுவது, கண்ணை மூடி எப்படியோ உளறுவது துணிவென் றெண்ணிக் கதையாக அளப்பதெலாம் துணிவே அன்று; கயமைஎன அதைஉலகம் கடிந்து சொல்லும்; இதையேதான் எழுதிடுவேன் இப்ப டித்தான் இயம்பிடுவேன் எனவரம்பு பூண்டு நின்று, பதையாமல் இடர்வரினும் தொடர்ந்து செல்லும் பயணந்தான் துணிவென்று சான்றோர் சொல்வர். செழிக்கட்டும் நாடென்று சிந்தித் தாய்ந்து செந்நாவான் பன்னூறு திட்டம் சொன்னான் கொழிக்கட்டும் நலமெல்லாம் என்ற நெஞ்சைக் கூசாமல் பழிக்கின்றார் இல்லை என்றே; பழிக்கட்டும் மறைக்கட்டும் ஏதோ சொல்லிப் பார்க்கட்டும் குறைவில்லை; நாட்டு மக்கள் விழிக்கட்டும் அதன்பின்னர் உண்மை தோன்றும்; விடியட்டும் இருளுக்கு வேலை யில்லை. நாட்டுக்கு நலஞ்சேர்க்கும் எண்ணம் ஒன்றே நாடியவன் சொலுந்திட்டம் கணக்கே யில்லை; ஓட்டுக்குச் சொலவில்லை ஊரை ஏய்க்க ஒப்புக்குச் சொலவில்லை உண்மைக் காகப் |