பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்85

26
வள்ளுவர் கோட்டம்

அறுசீர் விருத்தம்

மனத்தினுள் அழுக்கை நீக்கும்
       வாக்கினுள் தூய்மை யாக்கும்
வினைத்திறன் அனைத்தும் நேர்மை
       விளைத்திடும் நன்மை சேர்க்கும்
தினைத்துணைச் சொல்லால் பாட்டால்
       தீமைகள் அனைத்தும் மாய்க்கும்
அனைத்துல குள்ள மாந்தர்
       அனைவரும் போற்றும் நன்னூல்.

ஒருசிறு பாடல் நெஞ்சில்
       ஒட்டிக்கொண் டாலே போதும்
சிறுமைகள் அனைத்தும் தேய்த்துச்
       செம்மையை வாழ்விற் சேர்க்கும்
*பருவரல் மிகுந்த வாழ்விற்
       பண்புடன் அமைதி கூட்டும்
குறளென அதன்பேர் ஓதிக்
       கும்பிடும் உலக மெல்லாம்.

குறளெனும் அந்நூல் இங்கே
       குலவிடும் தமிழர்க் கெல்லாம்


*பருவரல் - துன்பம்