86 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
திருமறை யாகும் கண்டீர் தெளிநல் லுலகத் தார்க்கும் ஒருமறை யாகுங் கண்டீர் உயரிய அதனைத் தந்தோன் ஒருதமிழ் மகனே யாவன் உலகுக்குந் தலைவன் ஆவன். தமிழ்மொழிப் பெருமை யெல்லாம் தக்கவர் உணர வைத்தான் தமிழின மேன்மை யெல்லாம் தகவுறத் தெரிய வைத்தான் தமிழகப் பண்பா டெல்லாம் சரிவரத் தெளிய வைத்தான் தமிழரை உலக மெல்லாம் தாங்கியே புகழ வைத்தான். உள்ளுறு கோட்டம் நீக்கி உலகினில் நிமிர்ந்து வாழத் தெள்ளிய குறள்நூல் தந்த தெய்வமா கவிஞ னுக்கு வெள்ளிய கோட்ட மொன்று வியப்புற அமைக்க நெஞ்சில் உள்ளினர் ஒருவர் எங்கள் ஒப்பிலாக் கலைஞர் இங்கே. ஆய்ந்தொரு நிலத்தைத் தேடி அரிதினிற் பண்ப டுத்தித் தேர்ந்திடும் சிற்பம் வல்லார்த் தேடியிங் கழைத்து வந்து வாழ்ந்திட வண்ணக் கோட்டம் வகுத்தனர் கலைஞர் நெஞ்சில் |