88 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
தென்றிசை நோக்குங் கோட்டம் திராவிடர் கலையைக் காட்டும் இன்றும்அக் கலையில் வல்லார் இருப்பதைச் சிற்பங் காட்டும் மன்றினை முழுதுங் கண்டார் மனத்தினில் வியப்பைக் காட்டும் ஒன்றதற் குவமை சொல்வார் உளத்தினில் மயக்கங் காட்டும். தொழில்முறை சிறந்து காட்டும் தோரண வாயி லுள்ளே நுழைபவர் தமைம றப்பர் நுண்ணிய ராய்மி தப்பர் எழில்மிகு மைய மன்றில் ஏந்திடும் தூண்க ளில்லை அழகிய கலைகள் காட்டும் அரங்கமும் அங்கே உண்டு. நற்றமிழ்ச் சான்றோர் கூடும் நடுவரங் கதனின் பாங்கர்க் கற்றவர் அதங்கோட் டாசான் காப்பியர் உருவம் உண்டு; சொற்றிடும் குறளிற் கூறும் சொற்பொருள் உணர்த்தும் சிற்பம் பெற்றிடுந் திருத்தேர் ஒன்று பெருமிதத் தோடு நிற்கும். உலகெலாம் உணர்ந்த எங்கள் ஒப்பிலான் வடிவந் தாங்கும் கலையுலாம் திருத்தேர் அங்கே காணலாம் கண்டு வந்தால் |